பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

Wednesday, December 6th, 2017

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அதிபர் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமுல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா ஈரான் லிபியா சோமாலியா உள்ளிட்ட ஆறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து கீழ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் குறித்த வழக்குகளுக்கு எதிராக டிரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதனை ஆராய்ந்த உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சின் பெரும்பான்மை நீதிபதிகள் டிரம்ப் உத்தரவுக்கு அனுமதி வழங்கினர். இந்த தீர்ப்பு டிரம்ப் அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது

Related posts: