பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியது ஜப்பான்

சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த விவாதங்களுக்கு பின்னர் மேல்சபையால் குறித்த சட்டம்மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்ற நிலையில், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ஐக்கிய நாடுகளுடனான ஜப்பானின் உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த சட்டம் அவசியமானது என அரசாங்க தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது பயங்கரவாதிகள் அல்லது தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருக்கும் தனிநபரை அல்லது நிறுவனத்தை விசாரணை செய்வதற்கு அனுமதிக்கின்றது.
ஆனாலும் குறித்த சட்டம், குடிமக்களின் தனியுரிமை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அப்பாவி குடிமக்கள் மீதான பொலிஸ் கண்காணிப்புக்களுக்கு மேலும் வழிவகுக்கும் என்றும் விமர்சகர்களும் எதிர்பாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளன
Related posts:
|
|