பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிப்பு – பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு!
Saturday, November 21st, 2020ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளின் மிகப்பெரிய சதித் திட்டத்தை முறிடியத்ததற்காக, பாதுகாப்புப் படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜம்மு – ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோடா என்ற இடத்தில் லாரியில் மறைந்து வந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த மோதலில் பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டதுடன் பொலிஸார் 2 பேர் காயமடைந்தனர்.
குறித்த நால்வரும், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு தினமான எதிர்வரும் 26-ஆம் திகதி மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, எல்லையில் பாதுகாப்பு நிலவரம் தொடா்பான ஆய்வுக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவா்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதிலிருந்து, பயங்கரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதல் முயற்சி மீண்டும் ஒருமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு முறை துணிச்சலை வெளிப்படுத்திய நமது பாதுகாப்புப் படை வீரா்களுக்கு பாராட்டுகள். துரிதமாக செயல்பட்டு அவா்களுக்கு நன்றி” என மோடி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|