பயங்கரவாதத்தை எதிர்த்து போராட தவறுகிறது அமெரிக்கா – ரஷ்யா குற்றச்சாட்டு

Monday, July 24th, 2017

 

சிரியாவில் இயங்கும் அல்-நுஸ்ரா பயங்கரவாதக் குழுவை எதிர்த்து போராட, சிரியா மற்றும் ஈராக்கில் செயற்பட்டுவரும் அமெரிக்க தலைமையிலான கூட்டணி தவறி வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும், அமெரிக்க கூட்டணியானது, ஆரம்பம் முதலே தொடர்ந்து குறைந்த செயற்றிடனுடன் போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது தொடர்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால், அல்-நுஸ்ரா இயக்கத்தை எதிர்த்து போராட வொஷிங்டன் விரும்பாத நிலையில் குறித்த உடன்பாடு முறியடிக்கப்பட்டது.

Related posts: