பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்!

Friday, March 9th, 2018

பப்புவா நியூகினியா தீவில் இன்று 7.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என அமெரிக்க புவிசார் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூகினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலநடுக்கம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரபவுல் நகரில் இருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 7.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related posts: