பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்!

Wednesday, May 15th, 2019

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில், 7.7 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகிய நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவின் கோகோபோ என்ற நகரின் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது உயிரிழப்பும் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: