பன்றிக் காய்ச்சலால் இந்தியாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்வு!

Thursday, July 20th, 2017

இவ்வாண்டில் 12 ஆயிரத்து 460 பேருக்கு இதுவரை பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மேல்சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.இதன்போது கடந்த ஆண்டில் நாடளாவிய ரீதியில் 1786 பேர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டு 12 ஆயிரத்து 460 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களில் 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் குறித்த மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலால் 2 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 284 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதுபோன்றே குஜராத்தில் பாதிக்கப்பட்ட 289 பேரில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கேரளாவில் 1127 பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ராஜஸ்தானில் 59 பேர் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் தரவு ரீதியாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மாத்திரம் 2 ஆயிரத்து 896 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: