பணிப்புரைகளை ஏற்கப்போவதில்லை – கட்டலோனிய தெரிவிப்பு !

கட்டலோனிய பிராந்தியத்தின் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஸ்பெயின் முயற்சிக்குமானால், அதன் எந்த விதமான பணிப்புரைகளையும் ஏற்கப்போவதில்லை என கட்டலோனியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
கட்டலோனிய பிராந்திய அரசாங்கத்தை தாம் கலைப்பதுடன், நாடாளுமன்றத்தின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் திட்டத்தை அமுல்படுத்தபோவதாக ஸ்பெயின் பிரதமர் மாரினோ ராஜோய் எச்சரித்துள்ளார்.
ஸ்பெயின் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஆராயும் நோக்கில் கட்டலோனிய கட்சிகள் கூடி ஆராயவுள்ளன.கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மக்கள் கருத்து கணிப்பில் 90 சதவீதமான மக்கள் கட்டலோனியா தனிநாடாக செயல்பட வேண்டும் என வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கனடா விசா நடைமுறையில் மாற்றமில்லை!
போப் பிரான்சிஸை சந்தித்தார் ட்ரம்ப்!
பிரான்சில் தொடரும் பதற்றம் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு; அவசரநிலை பிரகடனம்!
|
|