பணிகளை ஆரம்பித்தார் அஞ்சலோ மேர்க்கெல்!
Saturday, April 4th, 2020ஜேர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கெல் தனது சுய தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த நிலையில், தனது பணிக்கு திரும்பியுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டமையினால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேர்கெல் மருத்துவ ஆலோசனையுடன் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டார்.
இதன் பின்னர் திங்களன்று வெளியானது அவரது மூன்றாவது பரிசோதனை அறிக்கையில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, உடல் நலத்துடன் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேர்கெல், பூரண குணமடைந்த நிலையில் தனது பணிகளை மீளவும் ஆரம்பித்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
Related posts:
விமானத்தை கடத்துவதாக அரேபிய மொழியில் கடிதம் - அச்சத்தில் விமானம் தரையிறக்கம்!
20 ஆண்டின் பின் ரஷ்யாவின் இராணுவ செலவினம் வீழ்ச்சி!
மணிப்பூரில் நிலச்சரிவு : 09 பேர் பலி
|
|