பணயக் கைதிகளாக மாணவர்கள் – நைஜீரியாவில் முற்றுகையிட்ட இராணுவம்!

Monday, December 14th, 2020

வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள், பாடசாலை மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக நம்பப்படும் பகுதியை அரசாங்க துருப்புக்கள் முற்றுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மடு புஹாரியின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சுமார் 800 மாணவர்கள் பயிலும் பாடசாலை ஒன்றின் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்திய துப்பாக்கித்தாரிகள் அங்கிருந்து பத்து மாணவர்களை சிறைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் சம்பவத்தின்போது அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தப்பிச்சென்ற சுமார் 400 மாணவர்களின் நிலைக்குறித்து இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் மாணவர்களை சிறைப்படுத்தியுள்ளவர்கள் கப்பம் பெறும்நோக்கிலேயே அவர்களை கடத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் வடக்கு நைஜீரியாவில் 1,100 க்கும் மேற்பட்டோர் கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறுகிறது.

எனினும் தாக்குதல் நடத்தியவர்களை நீதிக்குமுன் கொண்டு வர அரசாங்கம் தவறிவிட்டதாக அது குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: