பட்டாசு தொழிற்சாலையில் தீ: 22 பேர் உயிரிழப்பு!
Friday, June 9th, 2017மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, 14 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத் தீ விபத்தின் போது தொழிற்சாலையினுள் 45 பேருக்கும் அதிகமானவர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, தீயணைப்புக்குழுவினர் மேற்கொண்ட முயற்சி காரணமாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.காயமடைந்தவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|