படகு விபத்து : 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

Monday, July 30th, 2018

மேற்கு துருக்கியில் இடம்பெற்ற படகு விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக துருக்கி செய்தி சேவை தெரிவித்துள்ளது.

16 பேருடன் பயணித்த இந்த படகு கவிழ்ந்ததன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதுவரை 9 பேர் கரையோர காவற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை தேடும் பணி தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கியின் கரையோரத்தில் இருந்து லெஸ்பொஸ் தீவை நோக்கி பயணித்த வேளை, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளுக்கு துருக்கியில் இருந்து 54 அனுமதி இல்லா கடல் பயணங்கள் இடம்பெற்றுள்ளதாக கரையோர காவற்படை தரப்பினரின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: