படகு விபத்து: சினாவில் 17 பேர் உயிரிழப்பு!

Monday, April 23rd, 2018

சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் நேற்று படகு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பயிற்சி ஓட்டம் நடைபெற்ற வேளை, திடீரென ஏற்பட்ட விபத்தில் இரண்டு படகுகள் ஆற்றில் மூழ்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் இரண்டு படகுகளிலும் பயணம் செய்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில், சுமார் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த படகு போட்டிக்கு ஏற்பாடு செய்த இருவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: