படகு விபத்தில் 19 பேர் பலி 25 பேர் மாயம்!

Thursday, July 19th, 2018

சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த படகில் சுமார் 150 பேர் பயணித்த நிலையில் அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் துருக்கியின் மெர்சின் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய அகதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

Related posts: