படகு விபத்தில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, June 21st, 2018

இந்தோனேசியாவின் தோபா ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 192 ஆக உயர்வடைந்துள்ளது.

முன்னர் குறித்த படகு விபத்துக்குள்ளான போது 180 பேர் காணாமல் போனதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடும் பணியின் போது, 3 சடலங்கள் மீட்கப்பட்டதுடன், 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

படகில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயணித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 192 என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில், நீர் மூழ்கி கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுழியோடிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts: