படகு கவிழ்ந்து கோர விபத்து: காங்கோவில் 50 பேர் பலி!

Monday, May 28th, 2018

காங்கோவின் வடமேற்குப் பகுதியில் மொம்போயா ஆற்றில் நடந்த படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பலியானார்.மொன்கோட்டோ நகரில் இருந்து எம்பன்டாகா நகரை நோக்கி பொருட்கள் மற்றும் பயணிகளுடன் சென்ற ஒரு படகு விபத்தில் சிக்கியது.

இதையடுத்து நடந்த மீட்புப் பணியில் நேற்று முன்தினம் 49 உடல்களும் நேற்று ஓர் உடலும் மீட்கப்பட்டன.விபத்து குறித்து தஷுவபா மாகாண துணை ஆளுநர் கூறும்போது, “படகு மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை. படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பதும் உறுதி செய்யப்படவில்லை. அங்கு மீட்புக் குழுக்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இரவில் படகுப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டவிரோதமாக இரவில் படகுப் போக்குவரத்து நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.டி.ஆர். காங்கோவில் ஆறுகள் மற்றும் ஏரிகளில் அடிக்கடி படகு விபத்துகள் நேரிடுகின்றன.பழைய படகுகளைப் பயன்படுத்துவது, அதிக பாரம் ஏற்றுவது, பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாதது ஆகியவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் காங்கோ நதியில் 2 படகுகள் மோதி, கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது

Related posts: