படகில் தீ விபத்து!

Wednesday, October 3rd, 2018

லிதுவேனியன் கொடியுடன் 335 பேருடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேன் நாட்டை அண்மித்த பால்டிக் கடலில் பயணித்த படகிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மானியின் துறைமுகம் ஒன்றில் இருந்து லிதுவேனியன் நோக்கி அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகின் இயந்திர அறையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதையடுத்தே தீ பரவியுள்ளதாகவும், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: