பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் – ஐ.நாவில் தென்கொரியா அதிபர் அறிவிப்பு!

Thursday, September 22nd, 2022

வளர்ந்துவரும் நாடுகள் பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் என்றும் பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் முதல் உரையில் தென்கொரியா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உலகம் ஒன்றிணைந்து, சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையிலேயே, அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

மேலும் நோய்ப்பரவல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த அமைச்சர் நிலைக் கூட்டத்தை எதிர்வரும் நவம்பரில் ஏற்று நடத்த தயார் என்றும் தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: