நைஜீரியாவில் 75 போகோ ஹராம் தீவிரவாதிகள் உயிரிழப்பு!

Wednesday, November 4th, 2020

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 75 போகோ ஹராம் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 28 முதல் ஒக்டோபர் 31 வரையான காலப் பகுதியில் நைஜீரியாவின் கிளர்ச்சி மையமான போர்னோ மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதல் நடவடிக்கையின்போதே 75 போகோ ஹராம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலில் போகோ ஹராமினரின் ஸ்தலங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு கவச வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போகோ ஹராமின் ஒரு தசாப்தத்திற்கும் மேலான பயங்கரவாத நடவடிக்கைகளில் சுமார் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: