நைஜீரியாவில் 17 பேர் சுட்டுக்கொலை!
Monday, December 24th, 2018நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் திடீரென ஊருக்குள் புகுந்த குழுவொன்று அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக ஜம்பாரா, கதுனா மாநிலங்களில் துப்பாக்கிகளுடன் வந்து தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.
ஜம்பாராவில் மட்டும் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்பாரா மாநிலம் பாரு மாவட்டம் மகாமி கிராமத்தில் சனிக்கிழமை திடீரென நுழைந்த மர்ம நபர்கள், அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொண்டு தாக்குதல் நடப்பதை தடுக்கும் வகையில், கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
கிரைமியா உக்ரைனிடம் மீண்டும் ஒப்படைக்கப்படாது - ரஷ்ய வெளியுறவு அமைச்சகம்!
சுற்றுலா விமானம் விபத்து : 4 பேர் உயிரிழப்பு!
கொரோனா தொற்று - உலக அளவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைப்பு...
|
|