நைஜீரியாவில் வெள்ளம் – உயிரிழப்புகளுக்கு ஐநா இரங்கல்!

Saturday, October 13th, 2018

நைஜீரியாவில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நைஜீரியாவில் கடும் மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1310 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நைஜீரியாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

ஐநா சார்பில் உணவு விநியோகம், அவசரகால மருத்துவ உதவி மற்றும் காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதார பெட்டகங்கள் விநியோகம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts: