நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் – 13 இராணுவத்தினர் பலி!

Thursday, December 27th, 2018

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ராணுவ முகாம் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அங்குள்ள நெடுஞ்சாலை வழியாக கடந்த ராணுவ வாகனங்கள் அணி வகுத்து பயணித்த சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ராணுவ தரப்பினரும் எதிர்தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பினருக்கும் இடையில் சுமார் ஒருமணி நேரம் நீடித்த மோதலில் 13 ராணுவ வீரர்களும், ஒரு காவற்துறை அதிகாரியும் கொல்லப்பட்டதாக அரசாங்க தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 18 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related posts: