நைஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் மாயம்!

Friday, February 23rd, 2018

போகோ ஹராம் தீவிரவாதிகளால் நைஜீரியாவின் பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் காணாமல்போனதாக நைஜீரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை ஒன்றுக்குள் உள்நுழைந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டனர். அதன்போது பல மாணவர்களும் பணியாளர்களும்தப்பிசென்றுள்ளனர்.

இருப்பினும் தீவிரவாதிகள் சுமார் நுற்றுக்கும் அதிகமான மாணவிகளை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  முதலில் மாணவிகள் தப்பியிருக்கலாம் என நம்பப்பட்ட போதிலும் பின்னரே அவர்கள் கடத்திப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் போகோ ஹராம் தீவிரவாதிகள் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் 270 பாடசாலை மாணவிகளை கடத்திச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: