நைகரில் 50 மில்லியன் டொலரில் அமெரிக்க விமானத் தளம்!

Saturday, October 1st, 2016

ஆளில்லா விமானங்களை நிறுவக்கூடிய வசதி கொண்ட விமானத் தளம் ஒன்றை நைகர் நாட்டில் கட்டுவதற்கு அமெரிக்கா 50 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நைகர் தலைநகரில் ஏற்கனவே அமெரிக்கா செயற்படுவதோடு அங்கிருக்கும் விமானத்தளம் ஒன்றில் பிரான்ஸுடன் இணைந்து இஸ்லாமியவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. எம்.கியூ- 9 ரீப்பர் ஆளில்லா விமானங்கள் அங்கு நிலைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மத்திய நகரான அகெடஸில் நிறுவப்படவிருக்கும் விமானத்தளத்தின் மூலம் அண்டை நாடுகளான லிபியா, மாலியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓடுபாதை மற்றும் உட்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கான நிதியை வழங்க அமெரிக்கா இணங்கியதை பென்டகன் உறுதி செய்துள்ளது. இதற்கு 50 மில்லியன் டொலர் செலவாகும் என்று பென்டகன் பேச்சாளர் குறிப்பிட்டபோதும் இதனை விட இரட்டிப்பு செலவாகும் என்று மற்றொரு தகவல் குறிப்பிட்டுள்ளது.

ஆபிரிக்காவில் அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவ செயற்படாக நம்பப்படும் இந்த இராணுவ தளம் 2017இல் பூர்த்திசெய்யப்படவுள்ளது. அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கடினமாக பகுதிகளிலும் உளவு பார்ப்பது மற்றும் குண்டுகளை வீச உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

coltkn-10-01-fr-02160857377_4827384_30092016_mss_cmy

Related posts: