நேற் சூறாவளி – 22 பேர் பலி !

ouragan-irene Friday, October 6th, 2017

கொஸ்டரிகா(CostaRica), நிக்கராகுவா (Nicaragua) மற்றும் ஹொண்டூரஸ் (Honduras)ஆகிய நாடுகளை தாக்கிய நேற் (Nate) சூறாவளி குறைந்தது 22 பேரை பலியெடுத்துள்ளதாக அத்துடன், 20 பேர் காணாமல்போயுள்ளனர்

இந்த நாடுகளில் பாரிய மழை தொடர்ந்தும் பெய்வதனால் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன இதன்காரணமாக வீடுகள், வீதிகள் மற்றும் பாலங்கள் என்பன சேதமடைந்துள்ளன.

இதையடுத்து, மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நாடுகளில், அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த சூறாவளி அமெரிக்காவின் வடபகுதியை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது

கொஸ்டரிக்காவில் உள்ள சுமார் 4 லட்சம் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடரூந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், பல வாநூர்தி சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

 


சர்ச்சையில் சிக்கிய மலேசிய நிதியத்தின் நிர்வாகம் பதவிவிலக முடிவு!
துருக்கிக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!
போராட்டத்தைக் கைவிடும்படி காவல்துறை கோரிக்கை: நிராகரித்த இளைஞர்கள்!
ஹிட்லரின் நாசி ஆட்சியை ஒத்தது தற்போதைய ஜேர்மனின் ஆட்சி - துருக்கி ஜனாதிபதி தையீர் ஏர்துவான் குற்றச்ச...
2019 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக அதிகரிக்க்கும்!