நேபாளப் பிரதமர் இராஜினாமா!

Monday, July 25th, 2016
நேபாளப் பிரதமர் கே.பி ஷர்மா ஒலி பதவியேற்ற ஒன்பது மாதங்களில் பதவி விலகியுள்ளார்என தெரிவிக்கப்படுகின்றது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க வேண்டிய நிலையில், அவ்வாறு சந்தித்தால், அதில் தோற்பது உறுதியான நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என செய்திள் தெரிவிக்கின்றன.

அவரது கட்சியின் முக்கிய கூட்டணி கட்சி, இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆதரவைத் திரும்பப் பெற்றபோது, பிரதமர் ஒலியின் நிலை பலவீனமானது. சமீபத்திய ஆண்டுகளில் அரசியல் சர்ச்சைகளில் நேபாளம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்வதில் நீண்டகாலமாக அரசியல்வாதிகள் போராடி வருகிறர்கள். உள்நாட்டுப் போருக்கு பிந்தைய தீர்வுகளில், கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடின்மை தொடர்ந்துவரகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: