நேபாளத்தில் பூமியதிர்ச்சி!

நேபாளத்தில் கிழக்குபகுதியான பனோட்டி பகுதியில் அதிகாலையில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது. குறித்த பூமியதிர்ச்சி 5.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பூமியதிர்ச்சி இன்று அதிகாலை 5.05 மணிக்கு காத்மாண்டுவிலிருந்து 131 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பூமியதிர்ச்சி இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் உணரப்படதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடவில்லை.
Related posts:
மீண்டும் இரு ஏவுகணைகளை பரிசோதனை வடகொரியா!
சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக இருக்க வேண்டும...
குஜராத்தில் பாரிய தீ விபத்து - 19 மாணவர்கள் பலி!
|
|