நேபாளத்தின் முன்னாள் பிரதமர் காலமானார்!

நேபாளத்தின் பிரதமராக இருமுறை பதவி வகித்த துல்சி கிரி தனது 93ஆவது வயதில் காலமானார்.
சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துல்சி கிரி, தனது இல்லத்தில் மரணம் அடைந்ததாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1926 ஆம் ஆண்டு பிறந்த இவர், நேபாளத்தின் பிரதமராக கடந்த 1964 முதல் 1965 மற்றும் 1975 முதல் 1977ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இருமுறை பதவி வகித்தார்.
இவர் தனது அரசியல் பணிகளை, நேபாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தொடங்கினார்.
பஞ்சாயத்து சட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், நேபாளத்தின் மன்னராக பிரேந்திரா ஆட்சி செய்த காலப்பகுதியில், நேபாளத்தைவிட்டு வெளியேறி இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்து, வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாகிஸ்தானில் உயர் நீதிமன்ற நீதிபதியின் மகன் கடத்தல்!
கனடா மாநகரசபைத் தேர்தல்: இலங்கைத் தமிழர் வெற்றி!
ஸ்பெயின் விவகாரம் தொடர்பாக ஜேர்மன் கருத்து!
|
|