நேபாளத்தின் ஆபத்தான பனி ஏரி வடியச்செய்யப்பட்டது!

Monday, October 31st, 2016

நேபாளத்தில் எவரஸ்ட் சிகரத்தின் அருகில் இருக்கும் ஆபத்தான பனிஏரியை வடியச் செய்யும் முன்னோட்ட திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்றும் பிற இடங்களிலும் அது செயல்படுத்தப்படும் என்றும் நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

ஏரியின் கீழ் நோக்கி ஒடும் பாதையில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் பாயும் ஆபத்தை குறைக்கும் வகையில் இம்ஜா ஏரியின் அளவு சுமார் மூறைரை மீட்டர் அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து நீரை மெதுவாக வெளியேற்றும் பாதை ஒன்றை கட்டமைக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் மலையேறுபவர்கள் பல மாதங்களாக வேலை செய்தனர்.இமய மலை பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பனி ஏரிகளில் இம்ஜாவும் ஒன்று.உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதே பனி ஏரிகளின் நீர் அளவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது.

_92158714__92127331_1.imjalake-anarielview-copy

Related posts: