நெல்சன் மண்டேலாவின் மனைவி காலமானார்!

Wednesday, April 4th, 2018

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா  தனது 81 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்பத்தினால் அறிவித்தல்ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜொஹனர்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் காலமானார்.

இன வெறித் தாக்குதலுக்கு எதிரான செயற்பாடுகளில் முதன்மை செயற்பாட்டாளராகவும், இனவெறி அடிப்படையிலான அரசாங்கத்திற்கெதிராக பாரிய அளவில் தனது எதிர்ப்பைவெளிப்படுத்தியவராகவும் இவர் அறியப்படுகின்றார்.

இதனால் அவர், தேசத்தின் தாயாக தென்னாபிரிக்கர்களால் அழைக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: