நெதர்லாந்து பத்திரிகையாளரிடம் இருந்து மலேசிய விமான பாகங்கள் பறிமுதல்!

Monday, January 9th, 2017

2014 ஆம் ஆண்டு உக்ரைனில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணியர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து நெதர்லாந்து பத்திரிகையாளர் எடுத்ததாக நம்பப்படுகின்ற பொருட்களை நெதர்லாந்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிபோல் விமான நிலையத்தில் வைத்து, மிசெல் ஸ்பெக்கர்ஸிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பொருட்களை ஆய்வு செய்யப் போவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

உலோகப் பகுதிகளும், மனிதரின் எச்சமாக இருக்கக்கூடிய ஒரு பொருளும் இதில் அடங்குகின்றன.

தன்னுடைய மடிக்கணினி, தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவியை காவல்துறையினர் எடுத்து சென்றுவிட்டதாக ஸ்பெக்கர்ஸ் கூறியிருக்கிறார்.

அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் இன்னும் அவ்விடத்தில் எதற்காக கிடக்கின்றன என்று எண்ணி, விடை கிடைக்காத கேள்விகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பொருட்களில் சிலவற்றை எடுத்து வந்ததாகவும் பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.

ரஷ்யாவின் ஆதரவில் செயல்பட்ட கிளர்ச்சியாளர்களின் பகுதியில் வைத்து ரஷ்யாவின் ஏவுகணையால், எம்ஹெச் 17 பயணியர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, நெதர்லாந்து தலைமையிலான குற்றவியல் புலனாய்வில் கண்டறியப்பட்டது. ஆனால், ரஷ்யா அதனை சுட்டு வீழ்த்தவில்லை என்பது உறுதியானது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டனர்.

_93316398_a53262cc-b7ac-43db-a01e-764ea24917c0

Related posts: