நெதர்லாந்தில் மர்மநபரின் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

Tuesday, March 19th, 2019

நெதர்லாந்தின் உட்ரெச் நகரில் டிராம்(Tram) வண்டி மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி தாக்குதலுடன் தொடர்புடையவரை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.

Related posts: