நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன – ஆர்ஜன்டீன கடற்படை!

Saturday, December 2nd, 2017

காணாமல் போன ஆர்ஜன்டீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை தேடும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக ஆர்ஜன்டீன கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

44 பணியாளர்களுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் இந்த நீர்மூழ்கி கப்பல் காணாமல் போய் இருந்தது.இந்த கப்பல் இருக்கும் இடத்தை எந்த வகையிலும் அடையாளப்படுத்த முடியாதிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கப்பல் காணாமல் போனதாக கருதப்படும் இடத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவான நிலையில், யாரும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.