நிலைதடுமாறிய எயார் கனடா வானூர்தி – 35 பேர் காயம்!

Friday, July 12th, 2019

அவுஸ்திரேலியாவின் சிட்னியை நோக்கி பயணித்த எயார் கனடா வானூர்தி வான் பரப்பில் நிலைதடுமாறியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

சிட்னியை நோக்கி 284 பேருடன் போயிங் 777-200 ஜெட்  வானூர்தி நேற்று பயணித்தது.

இந்த நிலையில், தெளிவற்ற வானிலை காரணமாக குறித்த வானூர்தி வான் பரப்பில் நிலைத்தடுமாறியுள்ளது.

இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் குறித்த வானூர்தி ஹவாய் தீவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஹவாய் வானூர்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தரையிறக்கப்பட்ட குறித்த வானூர்தியில் காயமடைந்த பயணிகளுக்கு ஹொனாலுலு வானூர்தி நிலையத்தில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கான பிரிதொரு வானூர்தி ஏற்பாடு செய்யப்படும் வரையில் குறித்த வானூர்தியில் பயணித்த பயணிகள் ஹவாயில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: