நிலநடுக்கம் – அல்பேனியாவில் 2 பேர் பலி, 150 பேர் காயம்!

ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது அல்பேனியா. இதன் தலைநகர் டிரானாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
அல்பேனிய கடற்கரை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. வீட்டின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதால் மக்கள் அப்பகுதி மக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். டர்ரெஸ் எனும் நகரில் உணவகம் ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
வடக்கு பகுதியில் உள்ள தமனே நகரில் மின்வாரியமும், 3 அடுக்குமாடி குடியிருப்புகளும் கடுமையான சேதம் அடைந்தன. நிலநடுக்கம் காரணமாக இருவர் உயிரிழந்ததாகவும், 150 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததன என்பது குறிப்பிடத்தக்கது
|
|