நிலக்கரி சுரங்கத்தில் 13 தொழிலாளர்கள் பரிதவிப்பு!

Saturday, December 15th, 2018

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில், அருகில் உள்ள ஆறொன்றிலிருந்து தண்ணீர் புகுந்துள்ளது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ள நிலையில் 5 தொழிலாளர்கள் மட்டும் வெளியேறியுள்ளநிலையில் மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதையடுத்து மீட்புப்பணியினர் மீட்புப்பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்தநிலையில் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் கதி என்ன என இதுவரை தெரியாதநிலையில் அவர்களை மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: