நிறைவுக்கு வந்தது கஸ்ட்ரோ குடும்பத்தினரின் ஆட்சி !

Friday, April 20th, 2018

கியூபாவின் புதிய ஜனாதிபதியாக மிகூல் டயஸ் கேனெல் சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ராவுல் கஸ்ட்ரோ பதவி விலகியதை அடுத்து, அவரது பதவிப் பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

1959ஆம் ஆண்டு கியூபா பூரட்சியை அடுத்து, ஃபிடல் கஸ்ட்ரோ ஜனாதிபதியாக பொறுப்பு வகித்துவந்தார்.ஃபிடல் கஸ்ட்ரோவின் ஓய்வை அடுத்து, அவரது சகோதரரான ராவுல் கஸ்ட்ரோ ஜனாதிபதியாக இருந்து வந்த நிலையில், அவர் ஓய்வு பெற்றார்.

இதன்படி நீண்ட காலமாக இருந்த கஸ்ட்ரோ குடும்பத்தினரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ளது.

Related posts: