நிர்கதியாக விடப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்!

குடியேறிகளுக்கான, ஜங்கிள் என்று அழைக்கப்படும் கெலெய்ஸ் முகாம் அகற்றப்பட்ட நிலையில், அங்கு பதிவு செய்யப்படாமல் உள்ள பல குழந்தைகள் நிர்கதியாக நிற்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை முகாமை அகற்றும் நடவடிக்கைகள் துவங்கியதில் இருந்து 5500 பேர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில், பெரும்பாலானவர்கள், பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் உள்ள வரவேற்பு மையங்களுக்குச் சென்றுள்ளனர்.
ஆனால், பதிவு செய்யப்படாமல் விடப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்பதாக களத்தில் இருக்கும் தன்னார்வ அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. முன்பு முகாம் இருந்த இடங்களுக்கு அருகே கப்பல் கன்டெய்னர்களில் பல குழந்தைகள் இரவைக் கழித்ததாகவும், மேலும் சிலர் அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் கிடங்குகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.
Related posts:
|
|