நியூயோர்க் குடியிருப்பு கட்டிடத்தில் தீப் பரவல் 350க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்தில்!

Wednesday, April 7th, 2021

நியூயோர்க்கின் குயின்ஸில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடமொன்று தீப் பிடித்து எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் தீப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 350 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 8 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தில் காயமடைந்தவர்களில் 16 தீயணைப்பு வீரர்களும், ஐந்து பொதுமக்களும் உள்ளடங்குவதாகவும், எனினும் அதில் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் நியூயோர்க் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: