நியூஜெர்சி புகையிரத நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

Tuesday, September 20th, 2016

 

அமெரிக்காவில் நியூயார்க்கின் அண்டை மாகாணமான நியூஜெர்சியில் உள்ள ரயில் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூஜெர்சி மாகாணம், எலிஸபெத் ரயில் நிலையம் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், ஒரு பை இருப்பதாக திங்கட்கிழமை அதிகாலையில் தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் அங்கு விரைந்து சென்றனர்.

வெடிகுண்டு மீட்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி அந்தப் பையைத் திறந்தபோது, அதில் 5 வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்தது.அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய நிபுணர்கள் முயன்றபோது, குண்டு ஒன்று வெடித்ததாக FBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் கண்டெடுத்த பொருள், ஒரே வெடிகுண்டு போல இருந்தாலும் அதில் 5 வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மேலும் ஒரு பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் மீட்டு ஆராய்ந்து வருகின்றனர்.

முன்னதாக, நியூஜெர்சியில் மரத்தன் ஓட்டம் நடைபெறவிருந்த சீசைட் பார்க் பகுதியில் குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு சனிக்கிழமை வெடித்தது.

அதனைத் தொடர்ந்து எலிஸபெத் ரயில் நிலையம் அருகில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 BLAST2

Related posts: