நியூசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிச் சூடு – பலர் உயிரிழப்பு!

Friday, March 15th, 2019

நியூசிலாந்து, Christchurch  நகரிலுள்ள இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் அணி வீரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் ஒருவர் கைது செய்யட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.