நியூசிலாந்தில் சூறாவளி அபாயம் – மக்கள் இடப்பெயர்வு!
Sunday, February 12th, 2023சூறாவளி அபாயம் காரணமாக நியூசிலாந்தின் ஒக்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கப்ரியல் சூறாவளியின் மையம் தற்போது நியூசிலாந்திற்கு தெற்கே 910 மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், மணிக்கு 133 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் ஒக்லாந்தில் வரலாறு காணாத மழை பெய்த தருணங்களில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
கேப்ரியல் என்ற 2 ஆம் வகை சூறாவளி நேற்று அவுஸ்திரேலியாவின் நோர்போக் தீவை மணிக்கு 140 கி.மீ வேகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|