நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கத்தால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 2 தாதியர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகஇந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. எனினும் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்துவரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
முன்கூட்டியே தேர்தலுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய!
90 யானைகளின் சடலங்கள் மீட்பு!
அரசுக்கு எதிரான போராட்டம் - ஈராக்கில் 319 பேர் பலி!
|
|