நிபந்தனைகளுக்கு வடகொரியா உடன்பட வேண்டும் அமெரிக்கா!
Wednesday, May 3rd, 2017அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறுவதற்கு முதல் வடகொரியா சில நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை சரியான தருணத்தில் சந்திக்கக் கிடைத்தால் அது தனக்கு கிடைக்கும் கௌரவம் என நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததை தொடர்ந்தே வெள்ளை மாளிகை மேற்குறிப்பிட்டவாறு அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் அளித்திருந்த வெள்ளை மாளிகை ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவருக்கு இடையில் சந்திப்பு நடைபெறுவதற்கு முதல் வடகொரியாவின் கோபமூட்டும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. எனினும் நிபந்தனைகள் விடயத்தில் இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெள்ளை மாளிகை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|