நினைவில்லமாகுகிறது ஜெயலலிதாவின் இல்லம் !

poes Monday, January 8th, 2018

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லாததால் குறித்த இல்லம் நினைவில்லமாக்கப்படவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியளார் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4 மாதங்களுக்குள் வேதா இல்லம் நினைவில்லமாக்கப்படும் என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் போயஸ் கார்டனில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

வருமான வரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட இரண்டு அறைகளும் அதிகாரிகளால் மீண்டும் திறக்கப்பட்டு, ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே 24,000 சதுர அடியைக் கொண்ட போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


போதை மருந்து பயன்பாட்டு பரிசோதனை தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக்குழு ஆராய்வு!
இந்த மாத இறுதிக்குள் பணத் தட்டுப்பாடு நீங்கும் : நிதித்துறை அமைச்சர்!
கனடாவின் புதிய பணத்தாளை மகிமைப்படுத்தும் பெண்!
புகைப்பிடிப்பதால் அதிகமாக உயிரிழக்கும் முதல் 4 நாடுகளின் பட்டியலில் இந்தியா!
பாரிஸில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸார் ஒருவர் பலி!
2018-01-18 09.41.30

வீணைச் சின்னம் என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான சின்னம்!…