நாட்டுக்கு தலைகுனிவு – ஆஸி பிரதமர் மால்கம் டர்புல்!

Monday, March 26th, 2018

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் அவுஸ்திரேலிய வீரர்கள், மைதானத்தில் செய்த கீழ்தரமான செயலால் நாட்டுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக என அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்புல் தெரிவித்துள்ளார்.

கேப்டவுணில் நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் கேமருன் பேன்கிராஃப்ட், மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் மஞ்சள் டேப் மூலம் பந்தை சேதப்படுத்தியது கமெரா மூலம் தெரியவந்தது.

இவர்களின் இந்த கீழ்தரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும் ஐசிசி விதித்துள்ளது.

இதேபோல் பேன்கிராப்ஃட்க்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர் ஐசிசியின் சிகிச்சை சிறப்பாக உள்ளது.

உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? பேன்கிராஃப்ட்க்கு தடை விதிக்காதது ஏன்? கடந்த 2001 ஆம் ஆண்டு இதுபோன்ற விவகாரத்தில் இந்திய வீரர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2008 சிட்னி விவகாரத்திலும் 3போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது எனப் பொங்கியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், துணை அணித்தலைவர் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். புதிய பொறுப்பு அணித்தலைவராக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: