நாட்டிலுள்ள துருக்கிய ஆசிரியர்களை வெளியேற பாகிஸ்தான் உத்தரவு!

Thursday, November 17th, 2016

பாகிஸ்தானின் பல சர்வதேச பாடசாலைகளில் பணியில் அமர்த்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துருக்கிய ஆசிரியர்கள் இந்த வாரத்தின் கடைசியில் தங்கள் குடும்பங்களுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அந்த ஆசிரியர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த துருக்கிய மதகுரு ஃபெதுலா குலனுடன் தொடர்புடையதாக துருக்கியால் குற்றம் சுமத்தப்படும், 28 தனியார் பள்ளிகளில் பணிபுரிகின்றனர்; ஆனால் இதனை அப்பள்ளியின் ஊழியர்கள் மறுக்கின்றனர். துருக்கியில் கடந்த ஜூலை மாதம், தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஃபெதுலா குலனின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக துருக்கி அரசு குற்றம் சுமத்துகிறது; ஆனால் இந்தக் குற்றச்சாட்டை குலன் மறுத்துள்ளார்.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் பாகிஸ்தானிற்கான தனது இரண்டு நாள் பயணத்தை புதன்கிழமையன்று தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_92472189_gettyimages-623582438

Related posts: