நாட்டின் இராணுவ தளபாட உற்பத்தி அதிகரிப்பு – ராஜ்நாத் சிங்!

Thursday, September 26th, 2024

நாட்டின்  இராணுவ தளவாட உற்பத்தி, 2023 – 24 ஆம் ஆண்டில் 1.27 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

அதன்படி அனைத்து துறைகளிலும், நம் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக, ‘மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார் என்றும் கடந்த 10 ஆண்டுகளில், இராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தற்போது, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையும், தளவாடங்களையும் நம் ஆயுதப் படைகள் பயன்படுத்தி வருகின்றதுடன் 90 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

000

Related posts: