நாடாளுமன்றத்திற்குள் திடீரென நுழைந்த இராணுவம்!

Tuesday, February 11th, 2020

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நாடாளுமன்றத்திற்குள் இராணுவத்தினர் நுழைந்துள்ளனர்.

அந்நாட்டின் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பிரணைக்காக ஜனாதிபதி நயீப் புக்கேலே உரையாற்றவிருந்தபோது அந்நாட்டின் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் திடீரென இராணுவத்தினர் நுழைந்துள்ளனர். இதனால் அந்நாட்டின் பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது.

அந் நாட்டின் ஜனாதிபதி புக்கலே குற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளின் உபகரணங்களை மேம்படுத்த கடனைப் பெற்றுக்கொள்ள விரும்பியமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி புக்கலே 2019 ஜூன் மாதம் முதல் பதவியில் வகித்துவருகிறார்.

Related posts: