நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த போவதாக துருக்கி எதிர்க்கட்சி அறிவிப்பு!

Monday, November 7th, 2016

துருக்கி நாடாளுமன்றத்தில் தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக அங்குள்ள குர்து ஆதரவு பெற்ற எதிர்க் கட்சியான எச்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.

எச்.டி.பி கட்சியின் இரு தலைவர்கள் மற்றும் அதன் பிற உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.துருக்கியில் மூன்றாவது பெரிய கட்சியான எச்.டி.பியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பார்கள் எனவும், ஆனால் எந்த அமர்வுகளிலும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பயங்கரவாதம் தொடர்பான விசாரணை குறித்து கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

_92294941_gettyimages-621403294

Related posts: